வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:15 IST)

தீவிர ரசிகனுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி - 167 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் !

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்து தன் இடத்தை இன்றுவரை யாரும் எட்டிப்பிடிக்கமுடியாத அளவிற்கு வானுயர்ந்து நிற்கிறார். 


 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தன்னுடை அற்புதமான நடிப்பினால்  2.0 படத்தை உலகமறிய சாதனை செய்தார். இந்த  படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். பேட்ட திரைப்படம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு போட்டியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 
 
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி 166 படமாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியானது நம் அனைவருக்கும்  தெரிந்த ஒன்றே. இந்தப்படம் ரஜினியின் அரசியல் என்றியை மையமாகக்கொண்டு முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் தயாராகவுள்ளது . அப்படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. 
 
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த ஸ்வாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்கா சென்ற ரஜினி திரும்பியவுடம் முருகதாஸ் படத்தை தொடர்ந்து  தனது அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுக்கவுள்ளதாக தமிழ் சினிமாவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 
 
அதன்படி ரஜினிகாந்த் வரும் 8ம் தேதி சென்னை திரும்புகிறார்.  திரும்பியவுடன் ரஜினிகாந்த் – ஏ.ஆர் முருகதாஸ் இணையும் புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது மார்ச் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். 
 
முருகதாஸுடன் படத்தை முடித்துவிட்டு அதற்கு அடுத்ததாக தன்னுடைய 167வது படத்துக்காக தன்னுடைய தீவிர வெறித்தனமான ரசிகனான கார்த்திக் சுப்புராஜூடன் இரண்டாவது முறையாக கைக்கோர்க்க திட்டமிட்டுள்ளதாக செய்தி பரவிவருவது  என்பது நமக்கு தெரிந்த ஒன்றே .
 
அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறாரே தவிர வந்தபாடில்லை என ஒருபுறம் ரசிகர்மன்ற தலைவர்கள் புலம்ப மற்றொரு புறம் தலைவன் அரசியலுக்கு வராமல் தொடர்ந்து நடித்தாலே போது என்றும் அவரின் கெத்தான மாஸான ஸ்டைலுக்காக ஏங்கி தவிக்கின்றவர் ரஜினியின் ரசிகர்கள்.