திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (12:49 IST)

பேட்ட vs விஸ்வாசம் டிரைலர் புள்ளிவிவரம் – அடிச்சு தூக்கிய விஸ்வாசம், பின்னால் போன பேட்ட …

பேட்ட டிரைலரை விட விஸ்வாசம் படத்தின் டிரைலரை ரசிகர்கள் அதிகளவில் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் ரிலிசாக இருப்பதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் ஆன்லைன் உலகில் மோத ஆரம்பித்திருக்கின்றனர். பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற அந்த டிரைலர், அதில் ரஜினிப் பேசிய சில வசனங்களுக்காக அஜித் ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை.

அதையடுத்து 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி வந்தது விஸ்வாசம் டிரைலர். மாஸ் படமொன்றிற்கான கட்டியமாக அந்த டிரைலர் இருந்ததால் அஜித் ரசிகர்கள் டிரைலரைக் கொண்டாட ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல் டிரைலரில் அஜித் பேசிய சில வசன்ங்கள் பேட்ட டிரைலரில் ரஜினிப் பேசிய வசனங்களுக்குக் கௌண்ட்டராக அமைந்ததால் டிரைலர் வைரல் ஆனது. ஆனால் டிரைலரில் இவ்வாறு இரு நடிகர்களின் வசனங்களும் தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டைப் போட ஆரம்பித்தனர். இதில் சில விஜய் ரசிகர்களின் ஆதரவும் பேட்ட க்கு சார்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இரண்டு டிரைலர்களும் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய 2 டிரைலர்களில் மக்கள் கவர்ந்த டிரைலராக எது இருக்கிறது என்று பார்த்தால் விஸ்வாசமே அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. வெளியாகி 5 நாட்கள் முடிந்துள்ள் நிலையில் விஸ்வாசம் டிரைலரை 20 மில்லியன்(2 கோடி) பேர் பார்த்துள்ளனர். 1.3 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். இப்போதும் டிரெண்டிங்கில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

ஆனால் பேட்ட டிரைலர் வெளியாகி 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 18 மில்லியன் பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் லைக்குகளும் விஸ்வாசம் படத்தை விடக் கம்மியாகவே (6 லட்சம்) உள்ளது. டிரெண்டிங்கிலும் 9 ஆவது இடத்திலேயே உள்ளது.

இதனால் சமுக வலைதளங்களில் தங்கள் தலயும் தாங்களும்தான் கிங் என்பதி மீண்டும் ஒருமுறை  அஜித்தும் அஜித் ரசிகர்களும் நிரூபித்துள்ளனர்.