1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (14:46 IST)

போயஸ் கார்டன் தெருவில் வாக்கிங் செல்கிறாரா ரஜினிகாந்த்? வைரலாகும் வீடியோ

போயஸ் கார்டன் தெருவில் வாக்கிங் செல்கிறாரா ரஜினிகாந்த்? வைரலாகும் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் தெருவில் வாக்கிங் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த ஜூலை மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யா மற்றும் மருமகனுடன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டிச்சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் இபாஸ் எடுக்காமல் சென்றதாகவும் சர்ச்சைக்குள்ளானது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத ரஜினிகாந்த் தற்போது போயஸ் கார்டன் தெருவில் வாக்கிங் சென்று வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அவர்கள் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் இந்த  70 வயதிலும் சுறுசுறுப்பாக அவர் வேகமாக வாக்கிங் செல்லும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது