வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (09:12 IST)

பொது இடத்தில் ஜாக்கெட் கழற்றி... தன்னை நியாப்படுத்த சம்யுக்தா செய்த காரியம்...

சம்யுக்தா ஹெக்டே பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியீடு. 
 
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும், பப்பி உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் இவர் பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்ற சம்யுக்தா ஹெக்டே பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆம், அவ்ராது உடைக்காக அவர் சக மக்களால் தாக்கப்பட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 
 
மேலும், அந்த வீடியோவில் நான் போதை பொருட்கள் பயன்படுத்தவில்லை, வர்க் அவுட் செய்வதற்கேற்ப உடை அணிந்து இருந்தேன் என கூறுகிறார். இந்த வாக்குவாதத்தின் போது அங்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.