1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (14:06 IST)

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்: மனோபாலா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா இன்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலன் இன்றி சற்று முன் அவர் காலமானதாகவும் செய்திகள் வெளியாகின.
 
மனோபாலாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
 
மேலும் மனோபாலா மறைவிற்கு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran