திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:09 IST)

கொரோனா பாதிப்பில் இருக்கும் கமலிடம் நலம் விசாரித்த ரஜினி!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்து தகவல்கள் வெளியாகி உள்ளது