1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:38 IST)

கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார்… வைரமுத்து நலம் விசாரிப்பு!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனை பாடலாசிரியர் வைரமுத்து நலம் விசாரித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கலைஞானி கமல்ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன். நடந்தவை - நடப்பவை சொன்னார். குணம்பெற வாழ்த்தினேன். கட்டுறுதி மிக்க உடல்; கல்லுறுதி மிக்க மனம்; மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார்' என கூறியுள்ளார்.