செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (21:40 IST)

இதுவரை வெளிவராத ரஜினியின் புதிய போட்டோ…பேட்ட பட இயக்குநர் டுவீட்

ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பேட்ட படத்தில் ரஜினியின் இதுவரை வெளிவராத புகைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினி, விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான பொங்கல் பண்டிகைக்கு வெளியான பேட்ட படம் பெரும் வெற்றி பெற்றது.இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்தது. இப்படத்தின் ரஜினியுடன் சிம்ரன் உள்ளிட்ட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினியின் இதுவரை வெளிவராத புகைப்படத்தை இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் , பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது அளிக்கப்ப்பட்டுள்ளதால் இதன் ஷ்பெஷலாக இப்படத்தை வெளியிட்டுள்ளதாகன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.