திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (20:03 IST)

பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ’அண்ணாத்த’ செல்வராகவன் நடித்துவரும் ’சாணிக் காகிதம் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது பெற்றோருடன் குருவாயூர் கோவிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் அது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதற்கு முக்கிய காரணம் அவர் பாவாடை அணிந்து உள்ளார் என்பது தான்
 
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே பாவாடை தாவணி அணிந்து இருந்த கீர்த்தி சுரேஷ், வெகு அரிதாகவே பாவாடை தாணி அணிவதாகவும் தனது நீண்ட நாள் ஆசை இன்று நிறை வேறியது அதற்காக எனக்கு இந்த பாவாடை தாவணி டிசைன் செய்து கொடுத்த எனது டிசைனர் பூர்ணிமா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார் 
 
கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிப்பதற்காக பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது