1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (19:36 IST)

மீண்டும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி: அதிரடி அறிவிப்பு

மீண்டும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவு வந்துள்ளது. ஆனால் இந்த உத்தரவு தமிழகத்தில் அல்ல என்பதும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டு முதலில் 50 சதவீதம் பார்வையாளர்கள், அதன் பின்னர் 100 சதவீத பார்வையாளர்கள் என அனுமதிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திரையரங்குகள் மூடப்படலாம் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முதல் படியாக கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற உத்தரவு தமிழகத்திலும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்