1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor Rajini is reported to be suffering from vascular tissue destruction

ரஜினிக்கு ரத்தநாள் திசு பாதிப்பா? மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வழக்கமான பரிசோதனை நடந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி ரஜினிக்கு ரத்தநாள திசுக்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
ரஜினிகாந்த் அவர்களுக்கு இரத்தநாள திசு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அதனை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!