ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (20:28 IST)

அண்ணாத்த’ டிரைலரில் உள்ள மாஸ் வசனங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாதுரை திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் இந்த ட்ரெய்லரில் சிறுத்தை சிவா எழுதிய மனசு வசனங்கள் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த டிரைலரில் உள்ள சில வசனங்களை தற்போது பார்ப்போம்
 
’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’
 
’கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க’
 
’வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை’
 
’நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும்’
 
’கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன், எஙக ஊரு மதுர வீரன் சாமிக்கு உன்னை நேர்ந்து விட்டுட்டேன்’