வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (11:12 IST)

காலா டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'காலா' மற்றும் '2.0' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த டீசரில் 'இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசனம் இருப்பதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'காலா' படத்தின் டீசர் என்னென்ன சாதனைகளை முறியடிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்