1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (18:13 IST)

’ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான காவாலா பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம் பெற்ற தலைவர் அலப்பறை என்ற இரண்டாவது சிங்கள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலான காட்சிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். 

https://www.youtube.com/watch?v=1F3hm6MfR1k
 
 
Edited by Siva