வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (20:19 IST)

‘’மார்க் ஆண்டனி’’ படத்தின் முதல் சிங்கில் #Adhirudha பாடல் ரிலீஸ்!

நடிகர் விஷாலின் ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  முதல் சிங்கில் ரிலீஸாகியுள்ளது.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டபில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்க்   ‘’மார்க் ஆண்டனி’’ படத்தின்  #AdhiridhuMaame ‘’அதிருது மாமே’’ என்ற முதல் சிங்கில் பாடலை  டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.   சமீபத்தில், இப்பட பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது படக்குழு.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில், அசல் கோளாறு பாடல் வரிகளில் ‘’ மார்க் ஆண்டனி’’ பட முதல் சிங்கில் ’’#AdhiridhuMaame’’  என்ற பாடலை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.  டி. ராஜேந்தரின் குரலில் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படம்  விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு     ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.