போனியாகாமல் இருந்த லால் சலாம்… உதவிய ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் வேட்டையன் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்ட இந்த திரைப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிஸ்னஸ் விலை போகாததுதான் காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது ரஜினிகாந்தே சன் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி, தொலைக்காட்சி உரிமையை வாங்கிக்கொள்ள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.