1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (09:28 IST)

பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வந்த வேட்டையன்! – ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ்!

Vettaiyan
ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.



ஜெய்பீம் பட இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் பகத் பாசில், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வேட்டையன் படத்தின் டீசர் வீடியோ வெளியானது முதலே இந்த படம் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது.

இந்நிலையில் பொங்கலுக்கு புதிய அப்டேட் வெளியாவதாக நேற்றே தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பொங்கல் வாழ்த்துகள் சொல்லி வெளியாகியுள்ள அந்த போஸ்டரில் ரஜினி துப்பாக்கி ஏந்தி நிற்கும் போஸ் பலரையும் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

Edit by Prasanth.K