1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (23:00 IST)

அஜித்திற்கு உதவிய ரஜினிகாந்த்?

ajith- rajinikanth
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’வேட்டையன்’. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, அமிதாப்பச்சன்,ராணா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட  நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி, கேரளா, ஹைதாராபாத்தில் நடைபெற்றது.
 
இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அக்டோபர் ரிலீஸ் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் அவசரமாக எதற்கு ரிலீஸ் பற்றி அறிவிக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதன்படி, லைகாதான் ’விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்து வரும் என்பதால், ’வேட்டையன்’ பட பிஸினஸ் தொடங்க வேண்டும் என்பதற்காக இப்போதே அப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. அதனால், இப்படத்தை வாங்குபவர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி, மகிழ்திருமேனி இயக்கத்தில்,அஜித்  நடித்து வரும்  ‘விடாமுயற்சி ’பட வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
 
அநேகமாக ’வேட்டையன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன. எப்படியாவது விடாமுயற்சி படம் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டிற்கு காத்திருக்கின்றனர்.