திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (18:40 IST)

ரஜினியின் ''ஜெயிலர்'' பட ஜிலிம்ப்ஸ் வீடியோ வைரல்....

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ஜிலிம்ப்ஸ் வீடியோவை  சன்பிக்சர்ஸ்  தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்து உள்ளதாக  நேற்று சக்பிக்சர்ஸ்  அதிகாரப்பூர்வமான ஒரு போஸ்டரை வெளியிட்டது., இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட ஒருசிலர் நடித்து வரும் நிலையில் தற்போது சிவராஜ்குமார் இணைந்துள்ளதால் படம்  எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின்  ஜிலிம்ப்ஸ் வீடியோவை சன்பிக்சர்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.  அனிருத்தின் பின்னணியில் இசையில் அமைந்த மேக்கிங்  வீடியோ இதுவாகும். ஜெயிலர் பட சூட்டிங் ஸ்பாட்டிங் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj