செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (07:52 IST)

நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது: ‘வாழை’ படம் குறித்து ரஜினிகாந்த்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தை திரையுலகினர் கொண்டாடி வந்தனர் என்பதையும் பார்த்து வந்தோம். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்த போது கூட வாழை படத்தை பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வாழை படத்தை பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
 
மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
 
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 
 
கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. 
 
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
 
Edited by Siva