திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:52 IST)

சமூக நல்லிணக்கத்தை தெளிவாக காட்டுவதில் மாரி செல்வராஜ் தவறிவிட்டார்: ஜவாஹிருல்லா

வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை திரையுலகில் உள்ள பல பிரமுகர்கள் கொண்டாடிய நிலையில் சில அரசியல்வாதிகளும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சான் பிரான்சிஸ்கோவில் இந்த படத்தை பார்த்து பாராட்டினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தார் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கிய போது முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஜாதி மத வேறுபாடு இன்றி விடிய விடிய போராடி பலரை காப்பாற்றினார்கள். வாழை திரைப்படத்தில் இந்த காட்சியை காட்டாமல் சமூக நல்லிணக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாறி செல்வதால் தவற விட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு மாறி செல்வராஜ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பார்த்து இருந்து பார்ப்போம்.

Edited by Siva