ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (18:57 IST)

’கூலி’ படத்தில் ரஜினியின் கேரக்டர் போஸ்டர்.. ‘தளபதி’ கேரக்டரில் சூப்பர் ஸ்டாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் கொடுத்த போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புலி திரைப்படத்தில் ரஜினியின் கேரக்டர் தேவா என்று அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து இது குறித்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி நடித்த தளபதி திரைப்படத்தில் தேவா என்ற கேரக்டரில் நம் மம்முட்டி நடித்த நிலையில் அந்த கேரக்டரில் தான் தற்போது ரஜினி கூலி படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து இரு படங்களுக்கும் கனெக்சன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் உபேந்திரா, காளிஷா என்ற கேரக்டரிலும்,  சத்யராஜ், ராஜசேகர் என்ற கேரக்டரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும் நாகார்ஜுனா சைமன் என்ற கேரக்டரிலும் சோபின் ஷாஹிர், தயால் என்ற கேரக்டரிலும், நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva