செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (18:59 IST)

பிரம்மாண்டமாக உருவாகும் சூப்பர் ஸ்டாரின் பயோபிக்:இயக்கப்போவது யார்?

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு பிரம்மாண்டமாக தயாராக உள்ளது.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது இளமை பருவத்தில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமா மீது மோகம் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தார்.

அப்போது இயக்குனர் கே.பாலசந்தர், இவரது திறமையை கண்டு தனது “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அந்த படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு வெகுஜன மக்களை கவர்ந்தது.

பின்பு பல வெற்றிப் படங்களில் ஸ்டைலாகத் தோன்றி, தனது நடிப்பு திறமையால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆதலால் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆன்மீக அரசியல் கொள்கையில் ஈடுபடப்போவதாக கூறினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் வாழக்கை வரலாறை பிரம்மாண்ட திரைப்படமாக இயக்கவுள்ளனர். ஆனால் இயக்கவிருக்கும் இயக்குனர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

மேலும் ரஜினியின் கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்கவைப்பது எனவும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ஆனால் இயக்குனர் ஷங்கர் தான் நடிகர் ரஜினிகாந்தின் வாழக்கை வரலாற்றை இயக்கவுள்ளார் என சில கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு அவரின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.