புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 ஜூன் 2019 (14:58 IST)

முதன்முறையாக அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷிகண்ணா!

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்",  ‘கடைசி விவசாயி’  போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
 

 
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 


 
கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வரும் அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அந்தவகையில் தற்போது பிரபல மாத இதழ் ஒன்றின்  அட்டை படத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் கவர்ச்சியான ஆடை அணிந்துகொண்டு கண்ணை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் ரஷி கண்ணா.