வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (10:02 IST)

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற தமன்… குவியும் வாழ்த்துகள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

68 ஆவது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சூர்யா, சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி, ஜி வி பிரகாஷ் குமார், இயக்குனர் வசந்த், நடிகை தேவி பிரியா ஆகியோர் பெற்றுள்ளனர். சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசைக்காக ஜி வி பிரகாஷுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல பாடல்களுக்கான சிறந்த இசையமைப்பாளராக தமன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இசையில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்துக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் புட்ட பொம்மா பாடல் வைரல் ஹிட் ஆகி இணையம் எங்கும் ரசிகர்களின் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.