வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (09:16 IST)

‘எம் ஜி ஆர் முதல் சூர்யா வரை…’ தமிழ் சினிமாவில் இருந்து தேசிய விருது வென்ற நடிகர்கள் பட்டியல்!

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகராக 68 ஆவது தேசிய விருதுகள் விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

68 ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்த முறை தமிழ் சினிமா சார்பாக மொத்தம் 10 விருதுகள் பெறப்பட்டுள்ளன. இதில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர் (சூர்யா) உள்ளிட்ட ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டு தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்ற நிலையில் இந்த ஆண்டு சூர்யா பெற்றுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை சிறந்த நடிப்புக்காக தேசிய விருது வென்ற நடிகர்கள் பற்றிய பட்டியல்
  • எம் ஜி ஆர் – ரிக்‌ஷா காரன் (1971)
  • கமல்ஹாசன் – மூன்றாம் பிறை (1982)
  • சாருஹாசன் – டபரன கதே (1986-கன்னட திரைப்படம்)
  • கமல்ஹாசன் – நாயகன் (1987)
  • கமல்ஹாசன் – இந்தியன் (1996)
  • விக்ரம் – பிதாமகன் (2003)
  • பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம் (2007)
  • தனுஷ் – ஆடுகளம் (2010)
  • தனுஷ் – அசுரன் ( 2019)
  • சூர்யா – சூரரைப் போற்று (2020)