1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (15:15 IST)

பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி படத்தைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!

பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் கோபிசந்தை அழைத்துப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ள கோபிசந்த் டிவீட் செய்ய அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.