1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (21:57 IST)

அமெரிக்கா: மீண்டும் கறுப்பின வாலிபரை கொன்ற போலீஸார்! பரபரப்பு சம்பவம்

tyre Nichols
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபரை அமெரிக்க போலீஸார் கொன்ற நிலையில்,  இன்று டயர் நிக்கோலஸ் என்பவரும் போலீஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டில் டிரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில், கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை போலீஸார் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உலகம் முழுவதும் நிறவெறிக்கும் எதிராக பலரும் தங்கள் கருத்துகளையும், இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற  இடத்தில் கறுப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ்(29) விதியை மீறி காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, 5 காவலர்கள் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இத்ல், படுகாயத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் கண்டனம் குவித்து வரும் நிலையில், இளைஞர் நிக்கோலஸை தாக்கிய 5 போலீஸார் பணி நீக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.