திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (21:01 IST)

ரஜினி சாரை யாருடனும் ஒப்பிடக்கூடாது - விஜய் பட நடிகர் 'ஓபன் டாக்'

rajinikanath
ரஜினி சாரை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று  பிரபல நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஷ்யாம். இவர்,குஷி, 12பி பாலா,  அன்பே அன்பே, லேசா லேசா,  இயற்கை, ஏபிசிடி,கிக், தில்லாங்கடி, 6 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். இப்படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நடிகர் ஷ்யாமிடம்  ரஜினி ரசிகர்கள் அவர்தான் எப்பவும் சூப்பர் ஸ்டார், விஜய் ரசிகர்கள் இவர்தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று கூறிவருகின்றனர் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நடிகர் ஷ்யாம்,சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்கும்போது, ரஜினி சார், கமல்சார் எல்லாம் லெஜண்ட்ஸ். இளையராஜா சார், ரஹ்மான் சாரை எல்லாம் யாருடனும் இப்ப வர்றவங்கள கம்பேர் பண்ண கூடாது…அவர்கள் செய்தசாதனை எல்லாம் பென்ஞ் மார்க்…விஜய் அண்ணாவுக்கும், அஜித் சாருக்கும்தான் போட்டி உள்ளது… ரஜினி சாரை யாருடனும் ஒப்பிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.