திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (14:33 IST)

சூர்யாவுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

bubby deol
சூர்யாவின் 42 ஆவது படமாக உருவாகி வரும் படம்  கங்குவா. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின்  மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில்வெளியான நிலையில்,  3டி தொழில்நுட்பத்தில்  10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும்  இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ  நேற்று  முன்தினம் நள்ளிரவில் வெளியானது.

இந்த வீடியோ  வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில்,  இப்படத்தில்  பிரபல இந்தி நடிகரும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகனுமான பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் சூர்யாவுடன் இணைந்து, நட்டி, திஷா பதானி உள்ளிட்ட  நடிகர்கள் நடித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.