வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (08:12 IST)

லைகா நிறுவனம் சினிமாவுக்கே முழுக்கு போடவுள்ளது… பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பல படங்களைத் தயாரித்து வருகிறது. ஒரே சமயத்தில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரஜினியின் ‘வேட்டையன்’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.

ஆனால் இப்போது அந்த நிறுவனம் கடுமையான பொருளாதார சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “லைகா நிறுவனம் தங்கள் அஸ்தமனக் காலத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு தெரிந்து அவர்கள் சினிமாவுக்கு முழுக்குப் போடவுள்ளதாக நினைக்கிறேன். இதற்குப் பின்னர் அவர்கள் புதிய படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார். ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக செயல்பட்டு வந்த லைகா நிறுவனம் எடுத்த சில படங்கள் தோல்விப் படமாக அமைந்ததால் அவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.