1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:42 IST)

ரஜினியின் சூப்பர் திட்டம். .கை கொடுப்பாரா நெல்சன் ?

சூப்பர் ஸ்டார்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கினார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதையடுத்து, ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு சிறப்பான திரைக்கதை அமைய வேண்டும், படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக, ரஜினி   தன் நண்பரான கே.எஸ்.ரவிக்குமாரை திரைக்கதை எழுத பணியமர்த்தியுள்ளார்.  இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயன், சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்,  வரும் ஜூலை மாதம் இறுதியில், ரஜினி 169 படத்தின் படப்பிடிப்பு ஐதரராபாத்தில் தொடங்கவுள்ளது.  மேலும், இப்படத்தை 90 நாட்களில் முடிக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகளிடம் கால்ஷூட் பெற்றுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.

இதனால், ரஜினி ரசிகர்கள் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.