பிரபல நடன இயக்குனர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சின்னா. இவர் உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தனர் சின்னா(69). இவர், இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கிய தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.
அதன்பின், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் நடன இயக்குனராக இருந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
இதில், முக்கியமாக விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள், அமராவதி, வானத்தைப் போல, போன்ற படங்கள் ஆகும்.
இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.