திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:35 IST)

ரஜினியின் 45 வருட சினிமா பயணம்… பிரபல நட்சத்திரங்கள் வாழ்த்து

தமிழ் சினிமவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில் , நீங்கள் இல்லாமல் நான் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார். அவர் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

அபூர்வ ராகங்கள் படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் ரிலீசானது. இதைக் கொண்டாடும் விதமாக ரஜினியின் ரசிகர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள்   டுவிட்டரில் #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. எனப் பதிவிட்டுள்ளார்.