’தர்பார்’ படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜப்பான் ரசிகர்களின் வெறித்தனம்!

’தர்பார்’ படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜப்பான் ரசிகர்களின் வெறித்தனம்!
siva| Last Modified வியாழன், 22 ஜூலை 2021 (08:25 IST)
’தர்பார்’ படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜப்பான் ரசிகர்களின் வெறித்தனம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தர்பார்’ திரைப்படம் தமிழகத்தில் சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால் ஜப்பானில் சமீபத்தில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஜப்பானில் உள்ள பல நகரங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினியின் ’தர்பார்’ படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். ’தர்பார்’ திரையிடப்படும் தியேட்டர்களில் கூட்டம் அதிகமானதை அடுத்து பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது

இதனை அடுத்து தற்போது ’தர்பார்’ படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளார்கள் கூடுதலான தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் தற்போது ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் உள்பட மற்ற பகுதிகளில் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் ஜப்பானில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ரஜினியின் முத்து உள்பட பல திரைப்படங்கள் ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே
இதில் மேலும் படிக்கவும் :