ஜப்பானில் ரிலீஸான தர்பார்! அங்காவது வெற்றி பெறுமா?
ரஜினிகாந்தின் தர்பார் படம் ஜப்பானில் இப்போது இன்று ரிலீஸாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் கடந்த 2019 ஆம் ஆண்டு படுதோல்வி அடைந்தது. அதனால் தங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக போராட்டம் எல்லாம் நடந்தது. அந்த படத்தின் தோல்வியால் முருகதாஸுக்கு அடுத்த படத்துக்கான வாய்ப்புக் கூட இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள ஜப்பானில் இன்று வெளியாகியுள்ளது.
ரஜினியின் முத்து திரைப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.