மீண்டும் தாத்தா ஆகின்றாரா ரஜினிகாந்த்?

soundarya
மீண்டும் தாத்தா ஆகின்றாரா ரஜினிகாந்த்?
Mahendran| Last Updated: திங்கள், 19 ஜூலை 2021 (19:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த்துக்கு தற்போது தான் தெரியும் என்றும் இதனை அடுத்து இந்த செய்தி பரவலாக பரவி வருகிறது என்றும் கூறப்படுகிறது

ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதை அடுத்து அவரது குடும்பத்தினர் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
இதில் மேலும் படிக்கவும் :