வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (07:20 IST)

தமிழகத்தை அடுத்து இங்கிலாந்திலும் ரிலீஸ் ஆகும் 'பாட்ஷா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் சமீபத்தில் டிஜிட்டலில் வெளியாகி தமிழகம் முழுவதும் வசூலை குவித்த நிலையில் தற்போது  இங்கிலாந்திலும் வெளியாக உள்ளது.




கடந்த ,1995-ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா சமீபத்தில் தமிழகத்தில் வெளியாகி புது படங்களுக்கு இணையாக வசூல் செய்தது.

இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்காக ஏ அண்ட் பி என்ற நிறுவனம், சிங்கப்பூர், மலேசியா,துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பாட்ஷாவை திரையிட்டு பெரும் லாபத்தை சந்தித்தது

தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழர்கள், அதிக அளவு வாழ்ந்து வரும் இங்கிலாந்திலும் டிஜிட்டல் பாட்ஷாவை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.