1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (16:56 IST)

நடிகர் ரஜினியிடம் ஒரு மேஜிக் இருக்கு... தற்கொலைக்கு முயன்ற பெண் நம்பிக்கை !

இந்த நவீன உலகில் மக்கள் எந்திரம் போல் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். தொழில் நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு மனிதர்களுக்கு மன அழுத்தம் வளர்ந்துள்ளது.
இந்நிலையில், அனிஷா என்ற ஒரு இளம் பெண், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
 
அப்போது, அனிஷா, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி அப்பெண்ணுக்கு தைரியத்தைக் கொடுத்து, உற்சாகபடுத்தியுள்ளார். அதனால் அனிஷாவில் வாழ்வில் அது பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது.
 
இதனையடுத்து, அனிஷா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது : ரஜினியிடன் ஒரு மேஜிக் உள்ளது. அவரைச் சந்தித்த பிறகு எனது உடல் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதுபோல் உணர்கிறேன். நன் விரைவி குணமடைந்து விடுவேன் என கூறியுள்ளார்.