வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (22:40 IST)

கவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின், ஒரே நேரத்தில் சாக்சி, ஷெரின், அபிராமி மற்றும் ரேஷ்மா என மாறி மாறி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே லாஸ்லியாவிடமும் கடலை போடுவதுண்டு
 
ஆனால் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது கவினை 'அண்ணா' என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். ஏற்கனவே தன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது என்று லாஸ்லியாவை கண்டித்த கவின், இன்று மீண்டும் அவர் 'அண்ணா' என்று கூப்பிட்டவுடன் அதிருப்தி ஆனார்.
 
தன்னை அண்ணா என்று கூப்பிடக்கூடாது என்றும் அதுக்கு அர்த்தமே வேறு என்றும் கவின் கூறியபோது, 'நீ மட்டும் நாலு பொண்ணுகளை ஒரே நேரத்தில் ரொமான்ஸ் பண்ணலாமா? என்று கேட்க அதற்கு கவின், அது சும்மா 'பொய்' என்று சொல்ல, உடனே லாஸ்ல்யா சாக்சியிடம் உன்னை லவ் பண்றது பொய்யின்னு அவன் சொல்றான்னு சொல்ல கவினுக்கு தர்மசங்கடமாயிற்று. பொய்யின்னா அது வேற பொய் என்று சமாளிக்க முயன்றார். மொத்தத்தில் லாஸ்லியா தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மீண்டும் ஒருமுறை கவினிடம் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் என்று தெரிகிறது