புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (17:47 IST)

தர்பாருக்காக தவம் செய்யும் ரஜினி!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. மேலும் அடிக்கடி படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. 
 
அடுத்த வருடம் ஜனவரி 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததையடுத்து தற்போது படம் வெற்றி பெற வேண்டி ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி 10 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். அவருடன் அவரது அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார். திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 


 
அப்போது பேசிய அவர், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என கூறினார். மேலும் துவாராகாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.