ரஜினி & சிவா படம் – கைகோர்க்கும் விஸ்வாசம் கூட்டணி !

Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (09:20 IST)
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்காக விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களையே ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சிறுத்தை சிவா இப்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்போது இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கான தொழில்நுட்பக் கலைஞர்களாக சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வெற்றியும், எடிட்டருமான ரூபனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விஸ்வாசம் படத்தில் பாடல்கள் ஹிட்டானதை அடுத்து இமானையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவையனைத்தும் சன் பிக்சர்ஸ் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். ரஜினி நடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்குத் திரைக்கு வர இருக்கிறது.  அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :