ஓகே சொன்னாலும் நெல்சனுக்கு ரஜினி போட்ட கண்டீஷன்… வெளியான தகவல்!
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் இப்போது நெல்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் சுயவிவரக் குறிப்பில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 படத்தையும் இணைத்துள்ளார். இதனால் அவர் ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இந்நிலையில் நெல்சனின் இந்த மாற்றத்தை அடுத்து ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் 169 படத்தின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதன் மூலம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
படத்துக்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டாலும், இயக்குனர் நெல்சனிடம் முழுமையான திரைக்கதை பிரதியைக் கேட்டுள்ளாராம். அதை படித்த பின்னரே ஷூட்டிங் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.