1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (15:15 IST)

கையும் களவுமாக சிக்கிய விஜய் பட நடிகை: திரைத்துறையினர் கடும் அதிர்ச்சி!!

நடிகை அமீஷா படேல் மீது பைனான்சியர் ஒருவர் 2.5 கோடி செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகை அமீஷா படேல், நடிகர் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். அதுபோக ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அமீஷா அஜய் குமார் சிங் என்ற பைனான்சியரிடம் இருந்து 2.5 கோடி பணத்தை கடனாக பெற்று ஒரு படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் சொன்னப்டி அவரால் பைனான்சியருக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையே பைனாச்ன்சியர் அஜய், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அமீஷா 2.5 கோடிக்கு செக் போட்டு அதனை அஜய்யிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.
 
இதுகுறித்து அமிஷாவிடம் கேட்டபோது அவர் அஜய்யை ஆள் வைத்து மிரட்டியுள்ளார். இதையடுத்து அவர் அமீஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..