விஜயகாந்த் நினைவஞ்சலி பற்றிய கேள்விக்கு ‘வாழ்த்துகள்’ என பதில் சொன்ன ரஜினி!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமீபகாலமாக இவ்வளவு பேர் கலந்துகொண்ட ஒரு இறுதி ஊர்வலத்தைத் தமிழ்நாடு காணவில்லை.
இந்நிலையில் நேற்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக கட்சி நினைவஞ்சலி ஏற்பாடு செய்தது. கட்சி அலுவலகம் முன்பு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். ஊர்வலம் சென்றதால் கோயம்பேடு பகுதியில் சில மணிநேரங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ரஜினியிடம் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர் சூழ்ந்து விஜயகாந்த் நினைவு நாள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய போது முதலில் கேள்வி புரியாமல் வாழ்த்துகள் என சொன்னார் ரஜினி. அதன் பிறகு கேள்வியை விளக்கி சொன்னதும் ஓஹோ என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.