1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (06:53 IST)

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி-தனுஷ்: எந்த தேதி தெரியுமா?

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி-தனுஷ்: எந்த தேதி தெரியுமா?
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷ்க்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே அதேபோல் நேற்று ரஜினி அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் ரஜினி தனுஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் விருது பெறப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகைக்கான விருது தனுஷ்க்கும், சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் திரைப்படமும் தேர்வு பெற்றது 
 
இந்த நிலையில் தேசிய விருதுகள் வழங்கும் தேதி மே 3 என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே தேதியில் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிக்கு விருது வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே மாமனார் மருமகன் ஆகிய ரஜினி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் தங்களுக்குரிய விருதை பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது