வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:59 IST)

கர்ணன் படத்தில் தனுஷுக்கு இணையான கதாபாத்திரம் இவர்தான்!

கர்ணன் படத்தில் நடிகர் நட்டி நடராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நட்டி நடராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக திரையரங்கில் ரசிகர்கள் கண்டுகொள்ளட்டும் என ரகசியமாக வைத்துள்ளதாம் படக்குழு. சதுரங்க வேட்டைக்குப் பிறகு இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என அவர் நம்புகிறாராம்.