திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:05 IST)

தனுஷின் ஆஸ்தான இயக்குனர் பெயரில் மோசடி!

இயக்குனர் சுப்ரமண்ய சிவா பெயரில் சமுகவலைதளங்களில் சிலர் பண மோசடி செய்துள்ளதாக அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

தனுஷுக்கு திருடா திருடி படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர் சுபரமண்ய சிவா. அதன் பின்னர் அவர் சீடன் மற்றும் யோகி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது வெள்ளை யானை என்ற படத்தை சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியவர்களை வைத்து இயக்கி வருகிறார்.

மேலும் தனுஷின் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் பெயரில் போலிக் கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலம் சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை அவரே வெளிப்படுத்தி யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.