1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (07:34 IST)

ரஜினியின் கடைசி படத்தில் இணையும் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ’தர்பார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
 
இந்த நிலையில் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ’தலைவர் 168’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம்தான் ’தலைவர் 169’. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தனுஷ் தயாரிப்பது மட்டுமன்றி அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ரஜினியுடன் தனுஷ் நடிக்கும் முதல் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கும் ரஜினிகாந்த் அதன்பின்னர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அரசியலில் அவர் நினைத்தது நடந்தால் ஆட்சி, இல்லையேல் மீண்டும் ‘தலைவர் 170’ என அடுத்தடுத்த படங்கள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கதது.