திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (09:05 IST)

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினி படத்தில் அரவிந்த்சாமி?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 169 படமான ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 170 ஆவது படத்தை டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக சில தகவல்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.

அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இப்போது அந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அரவிந்த் சாமி தன்னுடைய அறிமுகப் படமான தளபதி படத்திலேயே ரஜினியோடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையாக இருப்பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.